சாதியைச் செல்லி தாக்கியதால் கோவையில் பெண் தற்கொலை முயற்சி

கோவை: கோவையில் சாதி பெயரைக் கூறி தாக்கியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் சாதி பெயரைக் கூறி தாக்கியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காளப்பட்டியை அடுத்த வெள்ளானைபட்டியில் வசித்து வருபவர் சுமதி. இவர் தனது மகன் பிரசாந்த் மற்றும் தாயுடன் அந்த பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதி பெயரைக் கூறி அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அடிக்கடி சண்டைபோடுவதாக தெரிகிறது.



இந்தநிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பானு என்பவரும் அவரது உறவினர்களும் சுமதியின் வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதோடு, அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த சுமத்தி வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது உறவினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுமதியின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...