பெங்களூர் : நாடே உற்று கவனித்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 101 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது.

கடந்த 2013-ம் சட்ட மன்ற தேர்தலில், 40 தொகுதிகளில் மட்டுமே வென்ற பா.ஜ.க., இந்த முறை முன்னிலை வகித்து ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும்பான்மைக்கான 112 தொகுதிகளைக் கடந்து அக்கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
தற்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 50 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது வரை 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகத்தில் மற்றொரு சக்தி வாய்ந்த இடத்தை மத சார்பற்ற ஜனதா தளம் பெற்றுள்ளது. அக்கட்சி 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இது வரை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பின் தங்கியுள்ளார். ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 101 தொகுதிகளில் பா.ஜ.க, முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற முடிவை எடுக்கும் திறனை 'மத சார்பற்ற ஜனதா தளம்' பெற்று, 'கிங்-மேக்கர்' என்ற இடத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.