பிரதமரை கொலை செய்வதாக தொலைபேசியில் பேசியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை : பிரதமர் நரேந்திர மோடி-யை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக தொலைபேசியில் பேசியதால் கைது செய்யப்பட்ட, முகமது ரபிக் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை : பிரதமர் நரேந்திர மோடி-யை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக தொலைபேசியில் பேசியதால் கைது செய்யப்பட்ட, முகமது ரபிக் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக். இவர் சேலத்தை சேர்ந்த நபரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையின் போது பிரதமர் மோடியை கொலை செய்யத் திட்டம் தீட்டியிருப்பதாக பேசிய ஆடியோ சமூவ வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி ரபீக்கை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

சிறையிலிருந்த அவருக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவின் பேரில் ரபீக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

முகமது ரபிக் கைது செய்யப்பட்டதற்கான ஆணை மருத்துவமனையில் அவரிடம் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது ரபீக் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்பதும், அதைத் தொடர்ந்து கார் திருட்டு, லாரி கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், அதேபோல் கடந்த 2014-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...