சட்டவிதிகளை மீறி தமிழகத்தில் திறக்கப்பட்ட 1,300 டாஸ்மாக் கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து சாலைகளை வகை மாற்றம் செய்து புதிதாக மதுபானக் கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சித்தபோது, அதற்கு இந்த உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
மேலும், சாலைகளை வகை மாற்றம் செய்யமாட்டோம் என்று தமிழக அரசும் உத்தரவாதம் அளித்தது. ஆனால், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர், உள்ளாட்சி சாலைகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக திறக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம்,‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து, அதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
அதுபோல வகை மாற்றம் செய்யாமல் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான விடுதிகளுக்கு எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டது.
இந்த உத்தரவினால், தமிழகம் முழுவதும் சுமார் 1,300 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதிகள் கன்வில் கர், சந்திரசூட் ஆகியோர் கொண்ட முதன்மை பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர்.
மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது இல்லை. அந்தந்த மாநிலத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். தமிழகத்தைப் பொருத்தவரை, அரசே மதுபானக் கடையை நடத்துகிறது. உயர்நீதிமன்றம் உத்தரவினால் 1,300 மதுபானக்கடைகளை மூட வேண்டியதுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
‘அதேநேரம், தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிடுகிறோம். தமிழக அரசு 1,300 கடைகளின் விவரம், அந்தக் கடை உள்ள பகுதிகளின் விபரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்.
அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள், உயர்நீதிமன்றம் அதை பரிசீலித்து, தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவை வருகிற மே 31-ந்தேதிக்குள் உச்சநீதிமன்றத்திற்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.