கோவை: சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் உள்ள பாடகிரி மலைப் பகுதியில் இருந்து கோவை வழியாக ஜீப்பில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், பீளமேடு போலீசார் சின்னியம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த சந்தேகத்திற்கு இடமான ஜீப்பை போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது அதில், மூட்டை மூட்டையாய் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர், ஜீப்பில் வந்த இருவரையும் விசாரணை செய்ததில், அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசிக்கும் வனராஜ் (45) மற்றும் கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் அவர்கள் இருவரையும் கைது போலீசார் ஜீப் மற்றும் அதில் இருந்த 250 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.