கோவை: போத்தனூரை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஊட்டியை சேர்ந்தவர் குமார் (35). இவர் கோவை போத்தனூரில் தங்கி மேசன் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து பின் தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். மேலும், அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இது தொடர்பாக, சிறுமியின் தாய் நேற்று போத்தனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஆய்வாளர் மகுஷா பேகம் குமார்-ஐ கைது செய்தனர். மேலும், அவர் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போஸ்கோ) உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.