நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவிற்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் குதிரை பந்தய போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று கோடை விழாவின் கலை நிகழ்ச்சிகள் அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் தொடங்கியது. இந்த கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். முதல் நாளான இன்று ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று தொடங்கிய இந்த கலை நிகழ்ச்சிகள் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.

குதிரை பந்தயம்
நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குதிரை பந்தயமானது ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 132-வது குதிரை பந்தயம் போட்டிகள் இன்று தொடங்கியது. மொத்தம் 28 நாட்கள் நடைபெறும் குதிரை பந்தயம், இந்த ஆண்டு 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திற்கு ஈடாக நடத்தப்பட்டு வரும் இந்த போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமின்றி, இந்த போட்டியை காண வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் குதிரை பந்தய போட்டிகள் உள்ளூர் மக்களை மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் குதிரை பந்தய ஆர்வலர்களுக்கு ஓர் சிறந்த பொழுது போக்கு அம்சமாக அமைந்துள்ளது.