மருத்துவம் குணமுடைய செங்காந்தள் மலர் விதையின் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ குணம் கொண்ட கண்வலி மூலிகை விதை எனப்படும் செங்காந்தள் மலர் விதையின் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ குணம் கொண்ட கண்வலி மூலிகை விதை எனப்படும் செங்காந்தள் மலர் விதையின் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருப்பூரில் மூலனூர், திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டாரங்களில் பரவலாகவும், கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, அரவக்குறிச்சி மற்றும் பெரம்பலூர், கடலூர், சேலம் மாவட்டப் பகுதிகளிலும் கண்வலி மூலிகை விதையை விவசாயிகள் பயிரிடுகிறார்கள். புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் இந்தக் கண்வலி விதை, உலகிலேயே தமிழகத்தில், குறிப்பாக திருப்பூர், திண்டுக்கல் மாவட்டப் பகுதியில் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, காணப்படும் தட்பவெட்பம் இந்த மூலிகை விதை உற்பத்திக்குச் சாதகமாக உள்ளது.



இப்பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் இந்த விதைகள் பயிரிடப்படுகின்றன. உலகளவில் பயன்பாடுமிக்க கண்வலி மூலிகை விதையை உற்பத்தி செய்வதில் பல்வேறு இடர்பாடுகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். உற்பத்தி செலவு அதிகம் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் இதனை உற்பத்தி செய்ய முன்வருவதில்லை. இடைத்தரகர்கள் மூலமாகவே விற்பனை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயி பழ. ரகுபதி கூறியதாவது :- நடப்பாண்டில், பூப்பருவத்தில் பருவமழை பெய்ததால், பூ காய்ந்து விதை உற்பத்தி கடுமையாகக் குறைந்துள்ளது. மேலும், பருவமழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விதை அதிகளவில் காய்க்கவில்லை. அதனால், விதை விலை உயராமல் சரிந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ. 3,800 வரை விற்றது. தற்போது, ரூ.3,000-க்கு இடைத்தரகர்கள் வாங்குகின்றனர். இதனால், விவசாயிகள் பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.



எனவே, இடைத்தரகர்களை ஒழித்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக வெளிப்படையாக விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதை அங்கரீக்கப்பட்ட பயிராக மாற்ற வேண்டும். பொருளீட்டு கடன் உள்ளிட்டவற்றை தரவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவே இல்லை. எனவே, கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் விதை விற்பனை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...