சர்ச்சையான ஆச்சி விவகாரம்: மன்னிப்பு கோரினார் அமைச்சர் செல்லூர் ராஜு

காரைக்குடி ஆச்சிகள் குறித்து நான் கூறிய கருத்து நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தியிருப்பதால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

காரைக்குடி ஆச்சிகள் குறித்து நான் கூறிய கருத்து நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தியிருப்பதால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

காலா பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, நதி நீர் இணைப்புதான் தனது வாழ்நாள் கனவு.நேரம் வரட்டும் ஆண்டவன் துணையுடன் மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நல்ல நேரம் பிறக்கும் எனப் பேசியிருந்தார். இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், நதிநீர் இணைப்பு குறித்து ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழகத்தில் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வேண்டுமென்றால் காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இது நகரத்தார் சங்கம் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருமணமான பெண்களை ஆச்சி என்று அழைக்கும் மரியாதைக்குரிய வார்த்தையை அமைச்சர் கேலி செய்துள்ளார் என்று காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் அமைச்சருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினர்.

இதுகுறித்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்," நான் நகரத்தார் சமூகத்தை மதிக்கிறேன். நான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அப்படி பேசவில்லை. நகரத்தார் சமூகம் மனம் புண்பட்டிருப்பதால் மிகவும் வருந்துகிறேன்," இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...