திருப்பூரில் 1,600 பேருக்கு தலா ரூ. 1 கோடி தொழிற்கடன் வழங்கப்படும் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் : நீட்ஸ் திட்டம் மூலம் திருப்பூரில் 1,600 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் தொழிற்கடன் வழங்க உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : நீட்ஸ் திட்டம் மூலம் திருப்பூரில் 1,600 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் தொழிற்கடன் வழங்க உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தையடுத்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது :- 

கோடைக் காலத்தில் குடிநீர் மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட்ஸ் திட்டம் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 1,600 பேருக்கு தலா ரூ. 1 கோடி தொழிற்கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், திருப்பூரில் பின்னலாடை சார்ந்த தொழில் ஊக்குவிக்கப்படுவதுடன், வேலை வாய்ப்பும் பெருகும்.

கால்நடை பராமரிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தமிழக மாணவர்கள் பயிற்சி பெற அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வுல்மேன் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்லாமா ஸ்டேட் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

இதன்மூலம், மாணவர்கள் அமெரிக்கா சென்று 4 முதல் 6 வார காலம், அங்கு பயிற்சி பெற்று வர வாய்ப்பாக அமையும். மேலும், விலையில்லா கால்நடை வழங்கும் திட்டத்தில் வழங்கப்படும் கால்நடைகளை கால்நடை பராமரிப்பு துறையே இனி வரும் காலங்களில் வழங்கும், என அவர் கூறினார். 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...