திருவனந்தபுரம் : கேரளாவில் முதன் முறையாக சட்டப்படி திருநம்பி - திருநங்கை திருமணம் செய்துகொண்டனர்.

வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது கபீர். இவரது மனைவி ஷனிபா. இவர்களின் மகள் இஷான். திருநம்பியான இஷான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆபரேஷன் மூலம் ஆணாக மாறினார். இதுபோல திருவனந்தபுரம் பாட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன்-உஷா தம்பதியின் மகன் சூர்யா. திருநங்கையான இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் சாதாரண மனிதர்களை போல திருமண வாழ்க்கையில் நுழைய விரும்பினர். இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
பெற்றோர் சம்மதம் கிடைத்ததும் இஷான்-சூர்யா இருவரும் திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி, இவர்களின் திருமணம் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள மன்னம் கிளப் அரங்கில் நேற்று நடைபெற்றது.
கேரளாவில் இதுபோன்ற திருமணம் முதல் முறையாக நடைபெற்றதால் அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மேயர் வி.கே. பிரசாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி. சீமா உள்ளிட்ட பிரமுகர்களும், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.