மூளைச் சாவு அடைந்த கோவை இளைஞர் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

கோவை: மூளைச் சாவு அடைந்த கோவையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

கோவை: மூளைச் சாவு அடைந்த கோவையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

பீளமேடு பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (22). சாலை விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று மணிகண்டனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது தாய் லதா மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.

தானம்

அதன்படி, அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும். கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி திருப்பூரை சேர்ந்த மூளைச் சாவு அடைந்த பெண் ஒருவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...