திருப்பூர்: திருப்பூர் அருகே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர், கொடுவாய் பகுதியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா பள்ளியின் தாளாளர் ஆவார். இவரது வீட்டில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும், திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்த மணியாள் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நீர் இறைக்கும் மின் மோட்டார் பழுதான காரணத்தால் சதீஷ்குமார் அதை சரி செய்ய முயன்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதையறிந்து, அவரைக் காப்பாற்ற முயன்ற மணியாளையும் மின்சாரம் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் மத்திய போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.