உதகையில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது ரோஜா கண்காட்சி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் நடக்கும் ரோஜா கண்காட்சி வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் நடக்கும் ரோஜா கண்காட்சி வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.



உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் ரோஜா கண்காட்சியை சிறப்பாக நடத்த தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். உலக ரோஜா சம்மேளனத்தினால் சிறந்த ரோஜா பூங்காவாக அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பூங்காவில் சுமார் 4,000 வகையான ரோஜாக்கள் சுமார் 40 ஆயிரத்திற்கு மேலான செடிகளில் பூத்து குலுங்குகிறது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



மேலும் ரோஜா கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலிருந்து பல வண்ண ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு வடிவமைப்புகளில் காட்சிப் படுத்தப்படவுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த ரோஜா பூங்காவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ரூ. 46 லட்சம் மதிப்பில் காட்சி அறையும் அமைக்கப்பட்டு வருவது இப்பூங்காவிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.



Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...