நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டம் : சேலம் கோட்ட மேலாளர் பேட்டி

மேட்டுப்பாளையம் : நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டமிட்டிருப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் ஆய்வு நடத்திய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.


மேட்டுப்பாளையம் : நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டமிட்டிருப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் ஆய்வு நடத்திய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும் நடைபாதை விரிவாக்கப் பணிகள் மற்றும் நீலகிரி மலை ரயிலின் இயக்கம் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஆய்வு நடத்தினார். 

இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் உள்ள மலை ரயில் கண்காட்சியகம் மற்றும் ரயில்வே பணிமனைகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- சுற்றுலா திட்டங்களுக்கு ரயில்வே துறை முன்னுரிமை கொடுத்து, பயணிகளின் வசதிக்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயிலுக்கு கூடுதலாக ஒரு என்ஜினும், பதினைந்து புதிய பெட்டிகளும் தயாராகி வருகிறது.

தற்போது, கோடை விடுமுறையை முன்னிட்டு இங்கிருந்து இயக்கப்படும் கூடுதல் மலை ரயிலின் கட்டணம் அதிகம் என்ற கருத்து உள்ள போதிலும், சிறப்பு ரயிலுக்கு இக்கட்டண உயர்வு தவிர்க்க இயலாது.

மேட்டுப்பாளையம் முதல் சென்னை வரை தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை விரிவாக்க திட்டம் உள்ளது. நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி மறுநாள் காலை ஆறு மணிக்குள் மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. அன்று இரவு 7.45 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிப் புறப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.

எனவே, இந்த இடைபட்ட நேரத்தில், இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை வழியாக மதுரை வரை இயக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...