கோவை : மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கும், தமிழகத்தில் பொழியும் தென்மேற்கு பருவமழைக்கும் இடையே ஒரு நேரடி இணைப்பு உள்ளதாகவும், அங்குள்ள காடுகளை அழித்தால் தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றும் மும்பையில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) நடத்திய புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கோவை : மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கும், தமிழகத்தில் பொழியும் தென்மேற்கு பருவமழைக்கும் இடையே ஒரு நேரடி இணைப்பு உள்ளதாகவும், அங்குள்ள காடுகளை அழித்தால் தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றும் மும்பையில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) நடத்திய புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
"மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அடர்ந்த காடுகளில் மழைக்காலங்களில் 40 சதவீத ஈரப்பதத்தை காணமுடியும் என்றும், வறட்சி காலங்களில் 25 முதல் 40 சதவீத நீரை இந்த மழைக் காடுகள் கொடுக்கும் என்பதும் எங்கள் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது." என்கிறார் ஐ.ஐ.டி மாணவர் கோஷ்.
இந்த மலைக்காடுகள், ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 1 மி.மீ மழையை தருகிறது. செப்டம்பரில் 3 மி.மீ. வரை மழை தருகிறது என்பதை இந்த ஆய்வு கூறுகிறது.
பற்றாக்குறை
தென்மேற்கு பருவ மழை பொழிவுக்கு ஈரப்பதத்தை அளிப்பதில் மேற்குத் தொடர் பகுதியில் உள்ள காடுகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை மதிப்பீடு செய்ய இந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்று ஆண்டு மழை அளவுகளை கணக்கீடு செய்துள்ளனர். அவை, 1993, 1999 மற்றும் 2002-ம் ஆண்டுகள். அப்போது, இந்த காடுகள் அழிக்கப்படுவதால் மாநிலம் முழுவதும் 40 முதல் 50 சதவீதம் வரை மழை பொழிவு குறைந்ததாக தெரியவந்தது.
"வனப் பகுதிகளை அழிப்பது பருவமழை பற்றாக்குறையை அதிகரிக்கிறது. பருவமழை பற்றாக்குறையாக இருந்த அந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வனப் பகுதிகள் அழிக்கப்படுவதை கண்டோம். பசுந்தன்மை குறைந்தால், பருவமழை பற்றாக்குறையால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படும்" என்றார் இந்த ஆய்வின் ஆசிரியர்.
அதிகரிக்கும் வெப்பநிலை

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதனால் மாநிலத்தின் பரப்பளவில் 0.25 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. 1990 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையே உருவான மாற்றம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அடிப்படியில், கடந்த 1951-ம் ஆண்டும் முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 0.02 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காடுகள் அழிப்பு, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் போன்ற மாநிலங்களும் மழையின் அளவை குறைத்துள்ளது. கோடை மழைக் காலத்தில் தமிழ்நாட்டில் கடந்த 1951 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரு ஆண்டுக்கு -1.35 மி.மீ அளவுக்கு மழை வரத்து குறைந்தது.
"மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள், ஒரு நீர் தேக்கியாக பயன்படுகிறது என்று கூறலாம். இந்த காடுகள் மழை பொழிவின் போது ஈரப்பதத்தை தன்னுள் தக்கவைத்துக் கொண்டு, வறட்சிக் காலங்களில் மழை பொழிய உதவுகிறது." என்கிறார் கோஷ்.
மழை பொழிவு குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மழைக் காடுகள் கட்டாயம் காக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் போனால், வருங்கால சந்ததியினர், குடிநீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்க நேரிடும் என்பதை இந்த ஆராய்ச்சிக் கட்டுரை விளக்குகிறது.