கோவை: கோவை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை:
கோவை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த வாரம் தொடங்கியது. ஆனால், பல இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்நிலையில், வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், நாமக்கல், கரூர், சத்தியமங்கலம், கோபி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோவையை பொறுத்தவரையில், லேசான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.