உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியல்: நீலகிரி மலை ரயிலுக்கு இடம்

கோவை: லண்டனில் வெளியாகும் 'தி கார்டியன்' செய்தித்தாள் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியலில் நீலகிரி மலை ரயில் இடம்பிடித்துள்ளது.

கோவை: லண்டனில் வெளியாகும் 'தி கார்டியன்' செய்தித்தாள் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியலில் நீலகிரி மலை ரயில் இடம்பிடித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் இந்த மலை ரயில், ஆரம்பத்தில் நிலக்கரியை எரித்து, அதன் மூலம் உருவாகும் நீராவியின் உந்து சக்தியில் இயங்கியது. இந்த மலை ரயிலை பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது மேலும் ஒரு சிறப்பு.

தற்போது, உலகின் சிறந்த ரயில் பயணங்களின் பட்டியலில் நீலகிரி மலை ரயிலுக்கு இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'தி கார்டியன்' செய்தித்தாள் உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் இத்தாலி, ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ரம்யமான ரயில் பயணங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், நீலகிரி மலை ரயிலும் இடம் பிடித்துள்ளது.



தடக்.. தடக்.. என்று ஊர்ந்து செல்லும் நீலகிரி மலை ரயிலுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது, தென்னக ரயில்வே மற்றும் ரயில் பயண பிரியர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...