பணி நிரந்தரம் செய்யக்கோரி தோட்டக்கலைப் பண்ணை ஊழியர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பூங்காக்களில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி 4-வது நாளாக இன்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பூங்காக்களில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி 4-வது நாளாக இன்றும்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ்பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களும், 10-க்கும் மேற்பட்ட பண்ணைகள் உள்ளன. இவற்றில், சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்கள் (தினக்கூலி) பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, நாளொன்றுக்கு ரூ. 250 மட்டுமே வழங்கப்படுகிறது. இது தவிர நிரந்தர பணியாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தற்காலிக பணியாளர்களாகப் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தோட்டக்கலைத்துறையே, தமிழக அரசோ கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி முதல் தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம், 4-வது நாளாக இன்றும்  பூங்கா வளாகத்தில் நடந்தது. கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தோட்டக்கலை இணை இயக்குநர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் உறுதியளித்தார். இருப்பினும், ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.



பூங்கா ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை அலங்கார மேடைகளில் அடுக்கும் பணிகள், பாத்திகள் பராமரிப்பு பணிகள் 4-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், போராட்டம் தொடரும்பட்சத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஏற்பாடு பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...