இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க அவசியமில்லை - கர்நாடக அரசு

டெல்லி : தற்போது இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க அவசியமில்லை என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

டெல்லி : தற்போது இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க அவசியமில்லை என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

​கடந்த 3-ம் தேதி காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகம் 4 டி.எம்.சி தண்ணீரை கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீர் இருப்பு தொடர்பாக அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக கர்நாடகம் தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்று அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று கர்நாடகா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கர்நாடக அரசு இதுவரை தமிழகத்துக்கு திறந்து விட்ட தண்ணீர் அளவு எவ்வளவு என்பதைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 116.74 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்றும், வறட்சி காலங்களில் கூடுதலாக தமிழகத்துக்கு 16.66 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக ஏப்ரல் 30-ம் தேதி வரை 100.4 டி.எம்.சி. தான் திறந்து விடவேண்டும். ஆனால் கர்நாடகம் கூடுதல் நீரே தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. மேலும், தமிழக-காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் அளவு அதிகமாகப் பெய்துள்ளது. எனவே, குடிநீர் பிரச்சனை என்பது அவர்களுக்கு இல்லை. ஆனால், கர்நாடகத்தில் குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், தற்போது குடிநீர் தேவைக்கு மட்டும் அணையில் தண்ணீர் இருப்பு உள்ளதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட அவசியமில்லை என்றும் கர்நாடக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நாளை வர உள்ளது குறிப்பிடத்தக்கது.​

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...