கோவை : மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக மூன்று நாள் பயிற்சி வகுப்பு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.
கோவை : மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக மூன்று நாள் பயிற்சி வகுப்பு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.
கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் 'ஸ்கூல் ஆஃப் சைன்ஸ்' என்ற அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு சார்பில் வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பார்க் ரெசிடென்சி அரங்கில் நடைபெறும் இந்த கலந்து கொள்ள மாணவர்களுக்கு ரூ.2,500 பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து 'ஸ்கூல் ஆஃப் சைன்ஸ்' அமைப்பைச் சேர்ந்த வினீத் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது :-
அறிவியல் குறித்து குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பயிற்சி வகுப்பின் குறிக்கோளாகும். 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கென நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பு அறிவியல் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். அவர்களை அறிவியல் பூர்வமாக சிந்திக்க வைக்கும். பொதுவாக 10 முதல் 14 வயதுடைய மாணவர்கள் அறிவியல் குறித்து அறிந்து கொள்ள தொடங்குகிறார்கள்.
நாங்கள் அவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சி மூலம் அறிவியலை உணர்த்துவோம். இந்த பயிற்சி வகுப்பில் அடிப்படை இயற்பியல், காமிரா செயல்பாடு, வாகன இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும். மேலும், தகவல்களைப் பெற பின்வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். +91 80984 47132.
இவ்வாறு அவர் கூறினார்.