சாலையில் சென்று கொண்டிருந்த கார் எரிந்து நாசம் : திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மூவர் உயிர் தப்பினர்.

திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மூவர் உயிர் தப்பினர்.

ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார்.  அதே பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பத்குமார் மற்றும் அவரது மகன்கள் உதயகுமார், ஜீவானந்தம் ஆகிய மூவரும் இன்று காலை திருப்பூரிலிருந்து மாருதி 800 வகை காரில் திருமூர்த்திமலை கோவிலுக்குச் சென்றனர். 



அவர்களது கார் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்புறம் உள்ள பேனட்டில் இருந்து புகை வந்தது. இதனால் அச்சமடைந்த மூவரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர்.

சிறிது நேரத்தில் காரின் முன் பகுதி எரியத் தொடங்கியது. பின்னர், தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இது தொடர்பாக, தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். 

தீ விபத்தில்  கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...