கோவை: வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்ட 1,000 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் இன்று தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்
கோவை: வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்ட 1,000 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் இன்று தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சியாக மியாவாக்கி முறையில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடவு செய்யப்பட்ட இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த பணியின் போது மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சப்பட்டது. மேலும், நீர் தேங்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.