நீட் தேர்வு : கோவையில் மாணவரின் உதவிக்கு சென்ற தாய் மயக்கம் - அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு

கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் உதவிக்குச் சென்ற அவரது தாய் மயக்கமடைந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் உதவிக்குச் சென்ற அவரது தாய் மயக்கமடைந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வுக்காக மாவட்டத்தில் 32 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் வெள்ளூரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியும் ஒன்று. இந்த நிலையில், இன்று அந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தாய் ரோகிணி (39) பள்ளி வளாகத்தின் வெளியே இருந்தார். அப்போது, அவர் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேர்வுக்காக மகனை அதிகாலையிலேயே சாப்பிடாமல் அழைத்து வந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 



இந்த நிலையில், தேர்வு மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தேர்வர்களுடன் வந்த பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...