கோவை: சர்வதேச செவிலியர்கள் தினத்தையொட்டி, கோவையில் சிறந்த செவிலியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
கோவை: சர்வதேச செவிலியர்கள் தினத்தையொட்டி, கோவையில் சிறந்த செவிலியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரியில் சர்வதேச செவிலியர்கள் தினத்தையொட்டி, விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் ஆகியோரும் பங்கேற்றனர். இதில், கோவையில் சிறந்த செவிலியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.