நீலகிரியில் தொடங்கியது கோடை விழா : கோத்தகிரியில் இன்று 10-வது காய்கறி கண்காட்சி

நீலகிரி: நீலகிரிமாவட்டம் கோத்தகிரியில் இன்று தொடங்கிய 10-வது காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரிமாவட்டம் கோத்தகிரியில் இன்று தொடங்கிய 10-வது காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.



கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இன்று தொடங்கியது. 



தொடர்ந்து, இரு நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சி மற்றும் கோடை விழாவைச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். 



கோடை விடுமுறையைக் கழிக்க நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.  



இந்தக் காய்கறி கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறை மற்றும் காய்கறி உற்பத்தி தொடர்பான விளக்க அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 



இதில், மைசூர் கத்திரிக்காயை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மெகா நந்தி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 



இதுதவிர, காய்கறிகளால் உருவாக்கப்பட்ட ரங்கநாதர் சிலை, மீன் உருவம், பட்டுப்பூச்சி உருவம், அலங்காரக் கோலம் மற்றும் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் விளைந்த மலை காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜான் சலிவன் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசத்து வருகின்றனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...