கோவை: சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 பத்திரிக்கையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சாந்தம் சமூக சேவை சங்கம் பாராட்டியது.

காந்திபுரம் அருகே உள்ள மேரிராணி பள்ளியில் சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, சாந்தம் சமூக சேவை சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த பத்து பத்தியாளர்களை தேர்வு செய்து விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் சிம்ப்ளிசிட்டியின் சிறப்பு செய்தியாளர் ஏ. ஜெரால்டு, மலையாள நாளிதழ் மாத்ரூபூமியைச் சேர்ந்த சுதிந்திர குமார், விஜய பாஸ்கர், மாலைமுரசு தொலைக்காட்சியின் முருகேஷ், மக்கள் தொலைக்காட்சியின் கணேஷ், புதிய தலைமுறையின் சுரேஷ், பாலிமர் தொலைக்காட்சியின் அருண் குமார், தினத்தந்தி நாளிதழின் ஆனந்த், லோட்டஸ் தொலைக்காட்சியின் ஜான் தினகரன் மற்றும் மலையாள நாளிதழ் தீபிகாவின் சந்தோஷ் ஜார்க் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி, பாராட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சாந்தம் சமூக சேவை சங்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜியோ குன்னத்துபரம்பில் கூறுகையில், "செய்தி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு குழந்தைகள் மத்தியில் ஏற்படவே, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனெனில், குழந்தைகள் பெரும்பாலும், ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். புத்தகம் வாசிப்பது, செய்தித்தாள்களை படிப்பது போன்றவற்றை மறந்து, உடல்நலத்திற்கு தீங்கை ஏற்படுத்திக் கொள்கின்றனர்," என்றார்.