திருப்பூர் : திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக பின்னலாடை நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் ஏற்பட்ட இழப்பிற்கு மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹார்வி ரோடு சிட்கோ பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் மழைநீர் புகுந்தது.
இதில், நிறுவனங்களில் பின்னலாடை உற்பத்திக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் மட்டுமின்றி, டெலிவரிக்கு தயாராக இருந்த பின்னலாடைகளும் சேதமாகின. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாநகராட்சியின் லட்சுமி நகர் பகுதியிலிருந்து ஹார்வி சாலையை இணைக்கும் வகையிலான சாக்கடையை அமைக்க, அங்குள்ள பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கியும் கூட, மாநகராட்சி நிர்வாகம் முறையான திட்டமிடல் இல்லாமல் சாக்கடை கால்வாய்களை அமைத்ததே மழைநீர் நிறுவனங்களுக்குள் செல்லக் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இதுபோன்ற கனமழை பெய்யும் பொழுதெல்லாம், பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும், இது குறித்து மாநகராட்சியிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பின்னலாடை நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.