திருப்பூர்: திருப்பூரில் செயல்பட்டு வரும் கழிவு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமாகின.
திருப்பூர்: திருப்பூரில் செயல்பட்டு வரும் கழிவு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமாகின.

டும்லைட் மைதானம் செல்லப்புரம் பள்ளி வீதியில் கஜானா என்பவருக்கு சொந்தமான கழிவு குடோன் செயல்பட்டு வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் உரிமையாளர் தொழுகைக்காக சென்றுவிட்டார். அதேநேரம், பணியாளர்களும் குடோனை மூடிவிட்டு சாப்பிட சென்றுள்ளனர். இந்நிலையில், குடோனிலிருந்து புகை வெளிவருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தில் சுமார் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை துணிகள் எரிந்து சேதமாயின. இந்தத் தீ விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.