தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுப்பு: தமிழக மாணவர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று தேர்வெழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று தேர்வெழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் வரும் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையம் அமைக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ., சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கியதை மாற்ற மறுப்பு தெரிவித்ததுடன், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்திற்கு சென்று தேர்வு எழுத வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மையங்களை மாற்ற முடியாது. அடுத்தாண்டு முதல் தமிழக மாணவர்கள் சிரமமின்றி தேர்வு நடவடிக்கை எடுக்க சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மைனர் என்ற நிலையில், அண்டை மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதுவது, மிகுந்த சிரமத்திற்குள்ளான காரியமாகும்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...