திருப்பூரில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் பறந்த அ.ம.மு.க., கொடியினால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் முழுவதும் மே தினம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இளங்கோ நகர் பகுதியிலும் மே தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள், அக்கட்சியின் கொடியினை கழற்றி அருகிலுள்ள சாக்கடையில் போட்டுவிட்டு, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடியினை ஏற்றியுள்ளனர். இதனைக் கண்ட பா.ஜ.க.,வினர், இளங்கோ நகர் பகுதியில் முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் அ.ம.மு.க., கொடியேற்றியதைக் கண்டித்தும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.



பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கட்சியினரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...