கோவையில் விற்பனையாகும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள மொழி: பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு

கோவை: கோவையில் விற்பனை செய்யப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்து அச்சிடப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் விற்பனை செய்யப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்து அச்சிடப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆவின் நிறுவனமானது தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். பால் வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் பால், தயிர், நெய் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரை லிட்டர் தயிர் பாக்கெட்டை ரூ.25-க்கு அறிமுகப்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம், கோவையிலும் இந்த தயிர் பாக்கெட்டுகள் அறிமுகமானது.



மலையாளம்

இதில் அரை லிட்டர் மஞ்சள் நிற தயிர் பாக்கெட்டில் 'ஆவின் தயிர்' என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

அதேபோல "கெட்டித் தயிர்" என்றும் மலையாளத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், ஆவினின் மற்ற எந்தப் பொருள்களிலும் மலையாள எழுத்துகள் இல்லை.

இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "கோவையில் மலையாளிகள் அதிகமாக இருப்பதால் அவர்களைக் கவர மலையாளத்தை அச்சிட்டுள்ளோம்.

கோவையில் முதற்கட்டமாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். அடுத்தகட்டமாக, மற்ற ஆவின் பொருட்களிலும் மலையாள எழுத்துகளை அச்சிடுவோம்." என்றார். 

இது தொடர்பாக உலகத்தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், "கோவையில் ஆவின் பால் பைகளில் மலையாள எழுத்துகள் பதிவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஆவின் பால் பைகளில் தமிழில் தான் எழுத வேண்டும். இதில் மலையாளத்தில் குறிப்பிடுவது என்பது தமிழர்களை அவமதிக்கும் போக்கு. இது உடனடியாக மாற்றப்பட வேண்டும்." என்றார்.



தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்.த.வேல்முருகன் கூறுகையில், "கேரளாவில் அட்டப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். கேரளாவில் மாநில அரசால் நடத்தப்படும் பால் பாக்கெட்டுகளில் மலையாள மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழுக்கும் கொடுக்கட்டும். அங்கும் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அவர்கள் வாங்கும் பால் பாக்கெட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்தால், இங்கு வாழும் மக்களுக்காக மலையாள மொழி இடம் பெறுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணயமும் இல்லை.



அதற்கான உத்தரவாதத்தை கேரள அரசிடம் பெற்று நடைமுறை படுத்திவிட்டு பிறகு மலையாள எழுத்துக்களை அச்சிடட்டும்.

ஆனால், தமிழகத்தில் மட்டும் மாற்று மொழிகளை தமிழர்கள் மீது திணிப்பது என்பது ஜனநாயகத்திற்கு முரணானது.

இங்கு இருக்கும் அதிகாரிகள் அவரவர் துறைகளில், அவர்களின் மொழிக்கும், இனத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது தமிழ் நாட்டிற்கு செய்யும் பச்சை துரோகம். தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி தமிழுக்கு எதிராக செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன்." என்றார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், "ஆவின் நிறுவனம் தமிழக மக்களின் நலனுக்காக உருவான நிறுவனம். ஆனால், இந்த ஆவின் நிறுவனத்தில் மலையாள மொழிகள் திணிக்கப்படுவது உகந்தது அல்ல. ஏற்கனவே மத்திய அரசு இந்தியைத் திணிக்கும் கொடுமையில் செயல்பட்டு வரும் சூழலில், தற்போது தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் மலையாளத்தைத் திணிப்பது மலையாள மொழியை ஊக்கப்படுத்தும் செயல்.

ஆவின் நிறுவனம் உடனடியாக மலையாளத்தில் அச்சிட்டு வரும் தயிர் பாக்கெட் விற்பனையை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான போராட்டங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுக்கும்." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...