தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க ஆளில்லா குட்டி விமானம்

கோவை: விவசாயத் துறையில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, வெள்ளம், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண்பதற்கு ஆளில்லா குட்டி விமானத்தை வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

கோவை: விவசாயத் துறையில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, வெள்ளம், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண்பதற்கு ஆளில்லா குட்டி விமானத்தை வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.



தமிழகத்தில் விவசாய நிலங்கள், பயிர்கள், வறட்சி, வெள்ளம், மகசூலில் ஏற்படும் பூச்சி தாக்குதல், தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யவும், தீர்வு காணவும் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்தவுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை வேளாண்மைப் பல்கலைக்கழக தொலை உணர்வு தொழில்நுட்பத் துறையின் சார்பில் இதற்கான சோதனை ஒட்டம் நேற்று நடைபெற்றது.



விவசாய நிலங்களில், பயிர்களில் ஏற்படும் பிரச்னை குறித்து இதுவரை செயற்கோள் புகைப்பட உதவியுடன் தீர்வு காணப்பட்டு வந்த நிலையில், இந்த ஆளில்லா குட்டி விமானம் மூலம் பூச்சி தாக்குதல், வறட்சி போன்ற பிரச்னைகளை இன்னும் துல்லியமாகவும், எளிதாகவும் தீர்வு காணமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



இது குறித்து தொலை உணர்வு தொழில்நுட்பத்துறை பேராசிரியர் பாலாஜி குமார் பேசுகையில், "கோவை அல்லது வெளி மாவட்டங்களில் பயிர்களில் அல்லது செடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், செயற்கைகோள் புகைப்பட உதவியுடன் எந்த மாதிரியான பூச்சி தாக்குதல் எவ்வளவு ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து வந்தோம். செய்கைகோள் புகைப்படம் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் எடுக்கமுடியும். 20 செ.மீ. தூரம் அளவில் உள்ள புகைப்படங்கள் தான் கிடைக்கும். ஆனால், இந்த ஆளில்லா குட்டி விமானம் மூலம் எப்போது பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக அங்கு செல்ல முடியும். மேலும், 4 செ.மீ. தூரம் அளவில் புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்க முடியும். இன்னும் துரிதமாக ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காண முடியும்," என்றார்.

இந்த ஆளில்லா குட்டி விமானத்தில் ஐந்து வகையான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், தெர்மல் விஷன் (Thermal Vision) துல்லியமாக கிடைக்கும். 8 கி.மீ., தூரம் வரை இதனை இயக்கமுடியும் என்பதால், வாகனம் செல்லமுடியாத இடங்களுக்கும் கூட எளிதில் சென்று வரமுடியும்.



இது குறித்து தொலை உணர்வு தொழில்நுட்பத் துறை தலைவர் செ. பழனிவேலான் பேசுகையில், "வறட்சி பாதிப்போ அல்லது வெள்ள பாதிப்போ ஏற்பட்டால், நேரடியாக சென்றாலும் கூட சில இடங்களில் ஆய்வு மேற்கொள்ள முடியாத அளவிற்கு பாதிப்புகள் இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் எங்கு வேண்டுமானலும், அதனை இயக்கி எத்தனை ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உடனடியாக கணக்கிட முடியும். தற்போது, ஒரு ஆளில்லா குட்டி விமானம் தான் வாங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவையைப் பொறுத்து அதிகம் வாங்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.



விவசாயிகளின் பிரச்னைகளை தொழில்நுட்ப ரீதியாக அணுக, இந்த முயற்சி விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...