தமிழகம் முழுவதும் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இன்று தொடங்கிய இந்த ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு 30-ம் தேதி வரை நடக்கிறது.


தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இன்று தொடங்கிய இந்த ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு 30-ம் தேதி வரை நடக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு ஆன்-லைனில் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை இன்று முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும். மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, கலந்தாய்வில் பங்கேற்கலாம். விண்ணப்பத்தை எப்படிப் பதிவு செய்வது என்பன உள்ளிட்ட முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.



அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.annauniv.edu மற்றும் http://tnea.ac.in என்ற இணையதளங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்யலாம். இணையவசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்புக்காக அமைக்கப்பட்டுள்ள 42 மையங்களில் பதிவு செய்யலாம்.

மேலும், கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களுக்‍கு 044-22359901 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்‍கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...