கள் இறக்கும் பானைகளை உடைக்கும் போலீசாரை கண்டித்து மறியல் போராட்டம் : தற்கொலைக்கு முயன்ற விவசாயி

திருப்பூர் : திருப்பூர் அருகே தோட்டங்களில் கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை போலீசார் அடித்து உடைத்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைத் தரக்குறைவாக பேசியதால், பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.

திருப்பூர் : திருப்பூர் அருகே தோட்டங்களில் கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை போலீசார் அடித்து உடைத்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைத் தரக்குறைவாக பேசியதால், பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலைக்கு முயன்றார். 



பல்லடத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாய தோட்டங்களில் கள் இறக்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, கடந்த சில தினங்களாக பல்லடம் போலீசார், கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை உடைத்தும், பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, பல்லடம் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த பல்வேறு விவசாய சங்கத்தினர், முற்றுகையிட்டு கள் இறக்க அனுமதி வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதனிடையே, இன்றும் பல்வேறு பகுதி தோட்டங்களில் கள் இறக்கக் கட்டியிருந்த பானைகளை போலீசார் அடித்து நொறுக்கினர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் காட்டூர் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த போலீசார், விவசாயிகளை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த மகேஷ் என்ற விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.



இதனைப் பார்த்த அருகில் இருந்த விவசாயிகள் உடனடியாக அவரை மீட்டு பொங்கலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பல்லடம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்வேறு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு பிறகும், கள் இறக்க தொடர்ந்து போலீசார் அனுமதி மறுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...