நீலகிரி : உதகையை அடுத்த தொட்டபெட்டா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிப் லைன் சாகச விளையாட்டு போட்டி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நீலகிரி : உதகையை அடுத்த தொட்டபெட்டா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிப் லைன் சாகச விளையாட்டு போட்டி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

உதகையில் கேபிள் கார் திட்டம் குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தக் கேபிள் கார் திட்டம் கானல் நீராக உள்ள நிலையில், தொட்டபெட்டா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில், இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு 102 அடி உயரத்திற்கு கோபுரம் அமைக்கப்பட்டு, கேபிள் கார் போன்ற ஜிப் லைன் சாகச விளையாட்டு, கமோண்டோ பயிற்சி, தொங்கு பாலம் போன்ற விளையாட்டுகள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சாகச விளையாட்டுகள் ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு திறமையை வளர்ப்பதற்கும், அவர்களின் அச்சத்தை போக்குவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.