சச்சின் பிறந்தநாளில் ரசிகர்களை கொதிக்க வைத்த ஆஸி., கிரிக்கெட் வாரியம்

சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வரும் நிலையில், அவர்களை கடுப்பேற்றும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு ட்வீட் செய்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வரும் நிலையில், அவர்களை கடுப்பேற்றும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு ட்வீட் செய்துள்ளது. 

கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 46-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். சச்சினின் ஸ்பெஷல் ஷாட், பெஸ்ட் கேட்ச், புகைப்படம் என தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளம்மிங்கும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் டேமியன் பிளம்மிங்-க்கு தெரிவித்துள்ள வாழ்த்துப்பதிவு டெண்டுல்கர் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

டேமியன் பிளம்மிங் பந்துவீச்சில் டெண்டுல்கர் போல்ட் ஆகும் பழைய கிரிக்கெட் மேட்ச் ஒன்றின் வீடியோவை பதிவிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேமியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆஸி., கிரிக்கெட் வாரியத்தின் இந்த விஷம பதிவுக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பதிவிட்ட வீடியோவுக்கு கீழே ஆஸ்திரேலிய அணியை சச்சின் துவம்சம் செய்த பல இன்னிங்ஸ்களின் வீடியோவை பதிவிட்டு இந்திய ரசிகர்கள் தங்களது பதிலை அளித்துள்ளனர். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...