காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கி கவுரவிப்பு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுத்தொகை வழங்கினார்.


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுத்தொகை வழங்கினார்.



ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்ததுடன், பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சத்தியனுக்கு தலா ரூ. 50 லட்சம் உயரிய ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது.

டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சரத்கமலுக்கு ரூ. 50 லட்சமும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சவுரவ் கோ‌ஷலுக்கு ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டது.

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ. 30 லட்சமும், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் தீபிகா பல்லீகலுக்கு ரூ. 60 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, பதக்கம் வென்ற வீரர்களுக்கு இன்று பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வீரர்களுக்கான பரிசுத் தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்தினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...