உடலில் உறுப்புகளைப் போல வளரும் கட்டிகள்... விநோத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வருமா தனியார் மருத்துவமனைகள்..?

தருமபுரியில் உறுப்புகளைப் போல ஒரு அங்கமாக வளர்ந்த கட்டிகளை அகற்றுவதற்கு, இலவச சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் முன்வருமா..? என விநோத நோயால் அவதிப்பட்டு வருபவர் எதிர்பார்த்துள்ளார்.

தருமபுரியில் உறுப்புகளைப் போல ஒரு அங்கமாக வளர்ந்த கட்டிகளை அகற்றுவதற்கு, இலவச சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் முன்வருமா..? என விநோத நோயால் அவதிப்பட்டு வருபவர் எதிர்பார்த்துள்ளார். 



தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமமான போடாரங்காட்டைச் சேர்ந்தவர் பழனிசாமி (46). இவர், 12 வயதில் இருந்து தாடை, கழுத்தின் பின் பகுதி, கைகளின் மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் எட்டு கட்டிகள் உருவாகின. பழனிசாமி வளர வளர, உறுப்புகளைப் போல கட்டிகளும் வளரத் தொடங்கின. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மருந்து, மாத்திரைகளை மருத்துவர் கொடுத்தனர்.

சுமார் 18 கிலோ எடை வரை வளர்ந்த அந்தக் கட்டிகளால், பழனிசாமிக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டது. உடலில் கட்டிகளுடன் பயணிக்க முடியாததால், மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார். எந்தப் பணிக்கும் செல்லாத நிலையில், வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகை கேட்டு, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் பலனில்லை. மேலும், இந்த விநோத நோயின் காரணமாக பழனிசாமிக்கு திருமணமும் ஆகவில்லை. சகோதரர்கள் தயவில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தனது பாதிப்புகள் குறித்த பழனிசாமி கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம், உதவித்தொகை வழங்கா விட்டாலும் பரவாயில்லை. உடலில் உள்ள கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால், என் சொந்தக் காலிலேயே நின்று பிழைத்துக் கொள்வேன்,'' என்றார்.

மன தைரியத்துடன் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்ல துடிக்கும் பழனிசாமிக்கு அரசு தரப்பில் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கு பல்வேறு தனியார் மருத்துவமனைகள் இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வரும் நிலையில், பழனிசாமிக்கும் அதுபோன்று நிகழ்வு நிகழாத என அவரும், அவரது குடும்பத்தினரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...