போலிசாரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கோவை : கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் நீரா மற்றும் கள் இறக்கிய விவசாயிகளின் தோட்டத்தில் தென்னம்மரத்தின் பாளையை வெட்டிய மதுவிலக்கு போலிசாரை கண்டித்து விவசாயிகள் இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கோவை : கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் நீரா மற்றும் கள் இறக்கிய விவசாயிகளின் தோட்டத்தில் தென்னம்மரத்தின் பாளையை வெட்டிய மதுவிலக்கு போலிசாரை கண்டித்து விவசாயிகள் இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் அருணாசலம் (57). இவர் அப்பகுதியில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இதில், அருணாசலம் நீரா மற்றும் கள் இறக்கி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென இவரது தோட்டத்திற்கு வந்த போலிசார் அத்துமீறி தென்னம் பாளையை வெட்டி பானைகளை உடைத்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

அதே போல, செந்தில் ராஜ் என்பவரின் தோட்டத்திலும் விவசாயிகளை விஷக்கள் விற்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் ஒன்றிணைந்த விவசாயிகள், அத்துமீறி மதுவிலக்கு காவல்துறையினர் மரத்தின் பாளையை வெட்டியதை கண்டித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து விவசாயி அர்ஜூனன் கூறியதாவது, எங்கள் தோட்டத்தில் நீரா பாணம் மற்றும் கள் இறக்கினோம்.ஆனால் போலிசார் ஊமத்தம் இலையை கள்ளில் கலந்து விஷக்கள் விற்பதாகச் சொல்லி மிரட்டினார். அதே போல குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டியதாகவும் இதனால் ஒன்றிணைந்து விவசாயிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தை முற்றுகை இட்டுள்ளோம் என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...