கோவை: தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிறிஸ்தவ சிறுபான்மை பேரவையினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 2 ஆண்டுகளாக அதிகரிக்கும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கிறிஸ்தவ அமைப்பினர் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், சிறுமி ஆசிபா கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய ஜனநாயக கட்சி, வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டன.