கோவை ஏ.டி.எம் மையங்களில் தொழில்நுட்ப கருவிகளை பொருத்தி தகவல்களை திருட முயற்சி

கோவை: கோவையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏ.டி.எம்-களில் ஸ்கிம்மர் கருவிகள் மற்றும் காமிராக்களை பொருத்தி தகவல்களை திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: கோவையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏ.டி.எம்-களில் ஸ்கிம்மர் கருவிகள் மற்றும் காமிராக்களை பொருத்தி தகவல்களை திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் இராமநாதபுரம் பகுதியில் உள்ள பங்கு சந்தை அலுவலகம் அருகில் ஒரு தேசிய வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க சென்ற நபர் ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில் செலுத்தினார். அப்போது, இயந்திரத்தில் இருந்த கருவி கழன்று வெளியே விழுந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கழன்று விழுந்த அந்த கருவி டெபிட் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடும் ஸ்கிம்மர் கருவி என்று தெரியவந்தது. அதேபோல் பின் நம்பர் பதிவு செய்யும் இடத்தில் ஒரு சிறிய காமிரா பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அதனைப் பொருத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.



இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள வங்கி கண்காணிப்பு காமிராவில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்திய ஆசாமிகளின் முகம் பதிவாகியுள்ளது. அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



ஏ.டி.எம் மையங்களை கண்காணிக்குமாறு வங்கி அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்துள்ளோம். ஆனால் பணத்தை நிரப்புவதோடு சரி, அதன் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து வங்கி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்கள் முறையாக ஆய்வு செய்வதும் இல்லை. இதனால், பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகியுள்ளது.

இதேபோல, கிராஸ்கட் சாலை, பீளமேடு ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத ஏ.டி.எம்.களை குறிவைத்து மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் கருவிகள் பொருத்தியிருந்தது தெரியவந்தது. அவற்றை பொருத்திய ஆசாமிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...