திருப்பூர் : காற்றாலை அமைப்பதற்காக நீர்நிலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கக் கோரி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குண்டடம் வட்டார நந்தவனம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட தும்பலப்பட்டி கிராமப்பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து, மின் கம்பங்கள் அமைக்கும் பணியினையும், போக்குவரத்து சாலைகளை அமைக்கும் பணியினையும் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மழைக்காலங்களில் விவசாயிகள் நீரைத் தேக்கி வைத்து விவசாயத்திற்காக நீரை பயன்படுத்தி வரும் நீர்நிலைகள் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் ஆதாரமும் அழிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.