கோவை சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட்: பி.யு.சி.எல் கண்டனம்

கோவை: காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வகுப்பறையில் பேசிய கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டக்கல்லூரி-க்கு பி.யு.சி.எல் கண்டனம் தெரிவித்துள்ளது.


கோவை: காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வகுப்பறையில் பேசிய கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டக்கல்லூரி-க்கு பி.யு.சி.எல் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரியா. இவர், புரட்சிகர மாணவர் முன்னணி என்ற அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளார். நேற்று வகுப்பறையில் பொதுவான சம்பவங்கள் குறித்து பேசும்படி ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டுள்ளார். யாரும் பேச முன்வராத நிலையில், மாணவி பிரியா-வை ஏதாவது ஓரு தலைப்பில் பேசும்படி ஆசிரியர் கூறினார். இதில், மாணவி பிரியா காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது, அங்கு வந்த உதவி பேராசிரியர் மாணவியை திட்டியுள்ளார். மேலும், ஆசிரியரையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் பேச்சு குறித்து வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் சிலரும், உதவி பேராசியரும் முதல்வரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாணவி பிரியா-வை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், மாணவர்களுக்கு இடையே பாலினம் மற்றும் மதரீதியாக மோதல் ஏற்படும் வண்ணம் பேசியதாலும், அதை கேட்கச் சென்ற ஆசிரியையை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாகவும், மத அரசியல் மற்றும் பாலியல் ரீதியான மோதல் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் மாணவியை சஸ்பெண்ட் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் கோவை சட்டக்கல்லூரி-க்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் சேகர் அண்ணாதுரை சட்டக்கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், "பிரியா-வின் கருத்துக்கள் அவரது பெண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. தனிப்பட்ட அல்லது குழுவின் பார்வையாக இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், சட்ட கல்லூரி நிர்வாகம் அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளி என்று முத்திரை குத்தியுள்ளது. இது பெண்ணிய குரல்களை மௌனமாக்கும் செயலாகும். உங்கள் செயலுக்கு கண்டனங்களை தெரிவிப்பதோடு, பிரியா இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்." என்று கூறியுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...