கோவையில் விஷூ கொண்டாடிய கேரள மக்கள்

கோவை: மலையாளிகளின் புத்தாண்டு தினமான விஷூ கோவையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.


கோவை: மலையாளிகளின் புத்தாண்டு தினமான விஷூ கோவையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 

தமிழகத்தில் 'தமிழ்ப் புத்தாண்டு' கொண்டாடப்படுவது போல கேரளாவில் 'விஷூ' பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கேரளா மாநில மக்களின் புத்தாண்டாகும். இதையொட்டி, கோவையில் வசிக்கும் மலையாளிகள் விஷூ-வை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சித்தாப்புதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலின் பிரதான தெய்வமான ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாகப் படைத்தனர். உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கோவில்களில் கை நீட்டம் வழங்கப்பட்டதைப் போல வீடுகளில் பெரியவர்கள் சிறுவர்களுக்கு காசு, பணத்தை கை நீட்டமாக கொடுத்தனர். மேலும், மலையாள பெண்கள் பாரம்பரிய முறையில் புத்தாடை அணிந்து கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டனர். உற்றார் உறவினர்களுக்கு உற்சாகமாக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...