தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட காட்டூர் மாரியம்மன்

கோவை : தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் காட்டூர் மாரியம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

கோவை : தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் காட்டூர் மாரியம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. 

சித்திரை திருநாளை தமிழர்கள் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் வருடமான விளம்பி வருடம் முதல் நாளான இன்று புத்தாண்டை கொண்டாடும் விதமாக கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, காட்டுர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரு. 5 கோடி மதிப்பிலான புதிய ரூ. 2000, ரூ. 500, ரூ. 200 மற்றும் ரூ. 50 நோட்டுக்களை கொண்டும், ரு. 3 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வைரக் கற்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரப் பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் வருடம் முழுவதும் செல்வ செழிப்புடனும், வளமாகவும் அமையும் என மக்களால் நம்பப்படுகிறது. இதனால், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக புதிய ரூ. 1 நோட்டு அன்பளிப்பும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இதேபோல, ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகருக்குத் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மா, பலா, வாழை, எலுமிச்சை, கொய்யா, மாதுளம் பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களைக் கொண்டும், பூக்களை கொண்டும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலான வீடுகளில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோலமிட்டும், புத்தாடை அணிந்தும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...