கோவை: கோவை வெள்ளக்கிணறு பிரிவு அருகே பேருந்து-மினி லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
கோவை: கோவை வெள்ளக்கிணறு பிரிவு அருகே பேருந்து-மினி லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
மேட்டுப்பாளையம் சாலை வெள்ளக்கிணறு பிரிவு அருகே இன்று காலை அரசுப் பேருந்தும் , மினி லாரியும் மோதி விபத்துஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.