கோவை : வரும் ஜுன் 4-ம் தேதி முதல் காப்பீட்டின் மூலம் சிகிச்சை அளிக்க போவதில்லை என இந்திய மருத்துவ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

காப்பீடு என்பது எதிர்கால தேவைகளுக்காக முன்கூட்டியே ரொக்கத்தை சேமித்து வைக்கும் ஓர் திட்டமாகும். இந்தக் காப்பீடுகளை தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு என பல்வேறு காப்பீட்டு வகைகள் உள்ளன. பெரும்பாலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியத்தில் இருந்து மருத்துவக் காப்பீட்டுக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்மூலம், ஊழியர்கள் தங்களது மருத்துவ தேவைகளை காப்பீடு மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், பழைய காப்பீட்டு தொகையை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சைக்கான தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. வரும் ஜுன் 4-ம் தேதி முதல் காப்பீட்டின் மூலம் சிகிச்சை அளிக்கப் போவதில்லை என இந்திய மருத்துவ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு, காப்பீடு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இது பற்றி இந்திய மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் என். மகேந்திரன் கூறுகையில், காப்பீட்டிற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது, வாழ்வதற்கான செலவு பெரிதும் அதிகரித்துள்ளது. மருந்துகள், சிகிச்சைகளுக்கான தொகையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் எங்களுக்கு பழைய தொகையின் அடிப்படையிலேயே சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கான கட்டணங்களை அளிக்கின்றனர். இது பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு பொருந்தும். ஆனால், சிறிய மருத்துவமனைகளுக்கு பொருந்தாது," என்றார்.