மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு : உலகளவில் ட்ரெண்டான #GoBackModi

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாக்கப்பட்ட #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாக்கப்பட்ட #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலைகள் தமிழகத்தில் வீசி வருகிறது. இந்த நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்திறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைதானார்கள்.

இதனிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு  தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் அதிகளவில் பயனாளிகளால் பயன்படுத்தப்பட்டது. இதனால், உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் முதல் இடம்பிடித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...