கோவை : கோவை காருண்யா கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை : கோவை காருண்யா கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிறுவாணி செல்லும் சாலையில் காருண்யா கல்லூரி இயங்கி வருகிறது. அக்கல்லூரியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், அக்கல்லூரியில் மிக அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர்கள் அக்கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 150 மாணவிகள் உட்பட பெண்கள் 700 பேர் கலந்து கொண்டு கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, "சஸ்பெண்ட் செய்த மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், யூனியன் வேண்டும், கட்டணத்தை உயர்த்தாதே" போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் எலிஜா பிளாசம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதனிடையே, பேராசிரியர் ஒருவர் கல்லூரியின் வாயிற் கதவு திறந்த போது, காரை வேகமாக இயக்கினார். அப்போது, போராட்டம் நடத்தி வந்தவர்கள் மீது கார் மோதியதில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், பேராசிரியரின் காரை மடக்கி அடித்து நொறுக்கினர். இதனால், கல்லூரி வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.